ADDED : பிப் 26, 2024 11:38 PM

ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்செயல் விடுப்பு எடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
போராட்டத்தில், 'துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் இடையே, ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய, மனிதவள மேம்பாட்டு துறை மூலம், தெளிவுரை வழங்க வேண்டும்;
இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில், விதித்திருந்த ஆணையை வெளியிட வேண்டும்,' என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில், (27ம் தேதி) இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், வருவாய் துறை சம்பந்தமான பணிகள் பாதிக்கப்பட்டன.
