/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு பன்றிகளால் நெற்கதிர் சேதம்; நஷ்டத்தில் கூடலுார் விவசாயிகள்
/
காட்டு பன்றிகளால் நெற்கதிர் சேதம்; நஷ்டத்தில் கூடலுார் விவசாயிகள்
காட்டு பன்றிகளால் நெற்கதிர் சேதம்; நஷ்டத்தில் கூடலுார் விவசாயிகள்
காட்டு பன்றிகளால் நெற்கதிர் சேதம்; நஷ்டத்தில் கூடலுார் விவசாயிகள்
ADDED : டிச 16, 2024 09:10 PM

கூடலுார்; கூடலுார் பகுதியில், காட்டு பன்றிகள் வயல்களில் நுழைந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கூடலுார் தொரப்பள்ளி, மண்வயல், புத்துர்வயல், குணில், அல்லுார் வயல் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்டுள்ள நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. அவ்வப்போது வரும் மழை பாதிப்பால் நெற்கதிர்கள் ஈரத்தன்மையுடன் இருப்பதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்துார் வயல் பகுதியில், வயல்களில் இரவில் நுழையும் காட்டு பன்றிகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன இதனை தடுக்க வழியின்றி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில், பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து வருகிறோம்.
நடப்பாண்டு ஆடியில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.
கடந்த சில நாட்களாக தொடரும் சாரல் மழையால் அறுவடை துவங்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இரவில் காட்டு பன்றிகள் நுழைந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
விவசாயிகள் கூறுகையில்,'காட்டு பன்றிகளால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, நெல் அறுவடை முடியும் வரை, காட்டு பன்றிகள் வயலுக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.