/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'வாட்டர் ஸ்கூட்டரில்' சவாரி; சுற்றுலா பயணியர் ஆர்வம்
/
'வாட்டர் ஸ்கூட்டரில்' சவாரி; சுற்றுலா பயணியர் ஆர்வம்
'வாட்டர் ஸ்கூட்டரில்' சவாரி; சுற்றுலா பயணியர் ஆர்வம்
'வாட்டர் ஸ்கூட்டரில்' சவாரி; சுற்றுலா பயணியர் ஆர்வம்
ADDED : நவ 12, 2024 06:00 AM
ஊட்டி ; பைக்காரா ஏரியில் 'வாட்டர் ஸ்கூட்டரில்' சவாரி செய்ய சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் பைக்காரா ஏரிக்கு சென்று படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணியரின் வருகையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் புதிய படகுகளை அங்கு இயக்கி வருகிறது. அங்கு, 8 இருக்கை மோட்டார் படகுகள், 19; 10 இருக்கை மோட்டார் படகு ஒன்று; 15 இருக்கை மோட்டார் படகு ஒன்று; மூன்று இருக்கை அதிவேக படகுகள், 7 உள்ளன.
இதை தவிர, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, 5 இருக்கை கொண்ட ஒரு உல்லாச படகு உள்ளது. சமீபத்தில் இரண்டு 'வாட்டர் ஸ்கூட்டர்' புதிதாக அறிமுக செய்யப்பட்டுள்ளன. தற்போது அணை முழு கொள்ளளவில் கடல்போல் காட்சி அளிப்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணியர் குறிப்பாக இளைஞர்கள் வாட்டர் ஸ்கூட்டரில் சுவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த வாட்டர் ஸ்கூட்டரை பயிற்சி பெற்ற ஊழியர்கள் இயக்குகின்றனர். இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், வரும் சீசன் காலங்களில் இவற்றை அதிகளவில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

