/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி
/
தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 14, 2024 09:07 PM
கோத்தகிரி : கோத்தகிரியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் துவங்கிய பேரணிக்கு தாசில்தார் கோமதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
வருவாய் ஆய்வாளர்கள் ஜான் எட்வின் மற்றும் கவிதா ஆகியோர், முன்னிலை வகித்தனர். பேரணியானது, பஸ் நிலையம், மார்க்கெட், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் வழியாக, மீண்டும் தாலுகா அலுவலகத்தை அடைந்தது.
பேரணியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் இருந்து தகவல்களை மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து, பதாகைகள் ஏந்தி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்கமல், மோகன்குமார், சத்யா திலகவதி மற்றும் மீனாட்சி சுந்தரம் உட்பட, அலுவலக உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.