/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
/
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : ஜன 29, 2024 11:44 PM

ஊட்டி;ஊட்டி எட்டின்ஸ் சாலை சாமுண்டி சந்திப்பு பகுதியில் இருந்து, பாம்பே கேசில் செல்லும் சாலையோரத்தில் தடுப்புகள் இல்லாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி பாம்பே கேசில் பகுதியில், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. தாழ்வான எட்டின்ஸ் சாலை சாமுண்டி சந்திப்பு - பாம்பே கேசில்செங்குத்தான சாலை, நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது.
குறுகலான இச்சாலையின் ஒரு பகுதி, இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதர் அகற்றாத இடத்தில், மண்ணரிப்பு ஏற்பட்டு, அடிபாகம் குடைந்து குழி ஏற்பட்டுள்ளது.
இதனால், எதிரில் வரும் வாகனங்களுக்கு ஒதுங்கும் போது, சாலை இடிந்து, விபத்து நடக்க வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு கருதி, சாலையோரத்தில், பேரிகார்டு அமைத்திருந்தாலும், கடுப்புச்சுவர் அமைத்தால்மட்டுமே, விபத்து நடக் காமல் தடுக்க முடியும்.
எனவே, நகராட்சி நிர்வாகம், 'கான்கிரீட்' தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.