/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பு இல்லாத சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்
/
தடுப்பு இல்லாத சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : நவ 12, 2025 11:01 PM

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு கக்குச்சி சாலையில், தடுப்பு இல்லாததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி கட்டபெட்டு வழியாக, கக்குச்சி மற்றும் தும்மனட்டி மார்க்கத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, பள்ளி வாகனங்கள், தேயிலை தொழிற்சாலை லாரிகள் உட்பட கனரா தனியார் வாகனங்களில் எண்ணிக்கை, வழித்தடத்தில் அதிகமாக உள்ளது.
சாலை சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று வருகின்றன. குறிப்பாக, பங்களோரை பகுதியில் சாலையோரம் குழி ஏற்பட்டுள்ளது.
இதனால், எதிரில் வரும் வாகனங்கள் ஒதுங்கும் போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி, சாலை ஓரத்தில் மண் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால், மழைநீரில் மண் கரைந்து குறிப்பிட்ட பகுதியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதம் அடைந்த சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

