/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.10 லட்சத்தில் அமைத்த சாலை; ஓரிரு நாளில் பெயர்ந்து வரும் அவலம்
/
ரூ.10 லட்சத்தில் அமைத்த சாலை; ஓரிரு நாளில் பெயர்ந்து வரும் அவலம்
ரூ.10 லட்சத்தில் அமைத்த சாலை; ஓரிரு நாளில் பெயர்ந்து வரும் அவலம்
ரூ.10 லட்சத்தில் அமைத்த சாலை; ஓரிரு நாளில் பெயர்ந்து வரும் அவலம்
ADDED : பிப் 06, 2025 08:28 PM

குன்னுார்; குன்னுார் அருகே, ஜெகதளா கலைமகள் பகுதி சாலை தரமில்லாமல் செப்பனிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே பெயர்ந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சி சார்பில், கடந்த வாரத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 65 மீட்டர் துாத்திற்கு சாலை செப்பனிடப்பட்டது. ஓரிரு நாட்களில் சாலை பெயர்ந்து வருகிறது.
மக்கள் கூறுகையில், 'மேடாக உள்ள இந்த சாலையை செப்பனிடுவதற்கு முன், பழைய சாலையை தோண்டி செப்பனிடாமல் தரமில்லாத பணி நடந்தது.
ஏற்கனவே, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், கழிவுநீர் கால்வாய் அமைக்க மக்கள் நிதி கொடுத்தும், அந்த பணியை முடிக்காமல், அவசர கதியில் சாலை செப்பனிடப்பட்டது. இது தொடர்பாக பணிகள் துவங்கும் முன்பே அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
சாலையோரத்தில் மழை நீர் செல்வதற்கும் வழி ஏற்படுத்தாமல் விடப்பட்டதால், மழை பெய்தாலே சாலை பெயர்ந்து வரும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.