/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொண்டியாளம் பகுதியில் சாலை துண்டிக்கப்படும் அவலம்
/
தொண்டியாளம் பகுதியில் சாலை துண்டிக்கப்படும் அவலம்
ADDED : ஏப் 11, 2025 09:46 PM

பந்தலுார், ; பந்தலுார் அருகே தொண்டியாளம் பகுதியில், சாலை துண்டிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
பந்தலுாரில் இருந்து தொண்டியாளம், உப்பட்டி, குந்தலாடி வழியாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கூடலுார் அருகே தேவர்சோலை மற்றும் நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், தொண்டியாளம் என்ற இடத்தில் சாலையை ஒட்டி நீரோடை செல்கிறது. இந்த பகுதியில் கடந்த மழையின் போது, சாலை விரிசலடைந்தது. சாலையின் ஒரு பகுதி பழுதடைந்து உள்வாங்கி வருகிறது.
சாலையின் கீழ் பகுதி தாழ்வாகி வருவதால், வளைவான இந்த பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் பஸ் செல்லும் போது நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தும் தீர்வு காணப்படவில்லை.
அதிகாரிகளின் அலட்சியத்தால் நடப்பாண்டு பருவமழையின் போது, சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.