UPDATED : அக் 14, 2026 07:03 PM
ADDED : அக் 14, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை சாலையோரம் தேங்கும் மழை நீரால், சாலை சேதமடைந்து வருகிறது.
கூடலுார் தேவர்சோலை சாலையோரங்களில் மழைநீர் தேங்குவதால், மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுவதுடன், சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர் ராஜேஷ் கூறுகையில்,‘‘இங்குள்ள சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர முட்புதர்களை அகற்றி, மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும்,’’ என்றார்.
