/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக - கேரள எல்லையில் பல இடங்களில் சேதமடைந்த சாலை! தற்காலிக சீரமைப்பு பணியால் ஓட்டுனர்கள் அதிருப்தி
/
தமிழக - கேரள எல்லையில் பல இடங்களில் சேதமடைந்த சாலை! தற்காலிக சீரமைப்பு பணியால் ஓட்டுனர்கள் அதிருப்தி
தமிழக - கேரள எல்லையில் பல இடங்களில் சேதமடைந்த சாலை! தற்காலிக சீரமைப்பு பணியால் ஓட்டுனர்கள் அதிருப்தி
தமிழக - கேரள எல்லையில் பல இடங்களில் சேதமடைந்த சாலை! தற்காலிக சீரமைப்பு பணியால் ஓட்டுனர்கள் அதிருப்தி
ADDED : ஜன 14, 2025 01:35 AM

கூடலுார் : 'தமிழக-கேரள எல்லையில் சேதமடைந்த சாலையை, தரமாக சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், தற்காலிக சீரமைப்பு பணியில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்,' என, ஓட்டுனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கூடலுாரில் இருந்து செல்லும், கோழிக்கோடு சாலை, நாடுகாணியில் பகுதியில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம், திருச்சூர், கோழிகோடு மாவட்டங்களுக்கு பிரிந்து செல்கிறது. தமிழகம் - கேரளா - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் இந்த சாலை உள்ளது. நாள்தோறும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக, கேரளாவில் இருந்து இவ்வழியாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
நுழைவு வரி வசூல்
அதில், மாநில எல்லையான நாடுகாணியில், வருவாய் துறையினர், நுழைவு வரி மையம் அமைத்து, கேரளாவிலிருந்து நீலகிரிக்குள் வரும் பிற மாவட்ட மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு நுழைவு வரி வசூல் செய்து வருகின்றனர்.
இச்சாலையில், கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் செம்பாலா வரை, 2 கி.மீ., துாரம்; நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., துார சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
இப்பகுதியில் வாகனங்களை இயக்க சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகி, நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
தற்காலிக பணியால் அதிருப்தி
தொடர்ந்து, சேதமடைந்து வரும் இச்சாலையை, நெடுஞ்சாலை துறையினர் நிரந்தரமாக சீரமைக்காமல், மண் அல்லது பாறை பொடி கலந்த ஜல்லி கற்களை குழிகளில் கொட்டி, தற்காலிகமாக சீரமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுநர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'மூன்று மாநிலங்களை இணைக்கும் இச்சாலை வழியாக, கேரளாவில் இருந்து, நீலகிரி வரும் வாகனங்களுக்கு, மாநில எல்லையில் சோதனை சாவடி அமைத்து, நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதன் மூலம், அரசுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.
எனினும், இச்சாலையை நிரந்தரமாக சீரமைக்காமல், தற்காலிகமாக சீரமைப்பதில் மட்டும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனால், அப்பகுதி தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், இச்சாலையை ஆய்வு செய்து, தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.