/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நில அளவையில் உறுதி செய்யப்பட்ட சாலை ஆக்கிரமிப்பு; முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 'நோட்டீஸ்' வழங்க நடவடிக்கை

ADDED : ஆக 14, 2025 08:14 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு காமராஜ் நகர் பகுதியில், நெலாக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாலையை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டி இருப்பது, நில அளவையில் உறுதி செய்யப்பட்டது.
பந்தலுார் அருகே பிதர்ர்காடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர்செல்வம். இவரது மனைவி டெர்மிளா நெலாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார்.
இவரின் வீட்டை ஒட்டி கிராமத்தின் மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்ல, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை இருந்தது. இந்த சாலையை ஒட்டி பன்னீர்செல்வம் தடுப்புச்சுவர் கட்டி, ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இப்பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'இதனை முறையாக நில அளவை செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்,' என, இப்பகுதி மக்கள் தாசில்தாருக்கு புகார் மனு அளித்தனர். தொடர்ந்து, 12ம் தேதி நில அளவை செய்யப்பட்ட நிலையில், துல்லியமாக ஆக்கிரமிப்பு கணக்கிட முடியாத சூழலில், ஜி.பி.எஸ்., கருவி மூலம் நில அளவை செய்ய முடிவு செய்யப்பட்டது.
நேற்று தாசில்தார் சிராஜுநிஷா மேற்பார்வையில், சர்வேயர் தினேஷ் தலைமையிலான நில அளவை குழுவினர் மற்றும் வருவாய் துறையினர், பொதுமக்கள் முன்னிலையில் நில அளவை செய்தனர். அதில், பன்னீர்செல்வம் மற்றும் மேலும் சிலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்தது.
தாசில்தார் சிராஜூநிஷா கூறுகையில்,''ஆக்கிரமிப்பு அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முதல் கட்டமாக, 15 நாட்கள் கால அவகாசத்தில் 'நோட்டீஸ்' வழங்கப்படும். அதனை தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு அகற்றாத நிலையில், வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றுவர்,'' என்றார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தாமோதரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.