/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளைஞர் விடுதி அருகே சாலை விரிவாக்க பணி
/
இளைஞர் விடுதி அருகே சாலை விரிவாக்க பணி
ADDED : ஜன 03, 2025 09:51 PM

ஊட்டி, ; ஊட்டி இளைஞர் விடுதி பூங்கா அருகே, சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில இருந்து, தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், அரசு இளைஞர் விடுதி அமைந்துள்ளது. அதன் எதிர்புறத்தில், தோட்டக்கலை துறை பராமரித்து வரும் பூங்கா அமைந்துள்ளது.
தாவரவியல் பூங்கா அருகே உள்ள இச்சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. கோடை சீசன் நாட்களில், நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை விரிவாக்க பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணிக்காக, பூங்காவில் குறிப்பிட்ட பகுதிகள், சாலைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இதனால், பாரம்பரியமிக்க பூங்காவின் எழில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 'பூங்காவுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் சாலையை விரிவுப்படுத்த வேண்டும்,' என, நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால், மாநில முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'கோடை சீசன் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் இச்சாலைகளில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. இதனால், நெரிசல் தொடர்கிறது. நெரிசலை கட்டுப்படுத்த, சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது,' என்றனர்.

