/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை ஓரங்களில் சமன்படுத்தும் பணி; மழை காலத்தில் பாதிப்பு நிச்சயம்
/
சாலை ஓரங்களில் சமன்படுத்தும் பணி; மழை காலத்தில் பாதிப்பு நிச்சயம்
சாலை ஓரங்களில் சமன்படுத்தும் பணி; மழை காலத்தில் பாதிப்பு நிச்சயம்
சாலை ஓரங்களில் சமன்படுத்தும் பணி; மழை காலத்தில் பாதிப்பு நிச்சயம்
ADDED : ஜன 30, 2024 11:00 PM

பந்தலுார்;பந்தலுார் சாலையோர பகுதிகளில் மண் நிரப்பி சமன்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக சாலைகள் சீரமைக்கும் போது, பழைய சாலைகளை பெயர்த்து எடுக்காமல், அதன் மீது சாலை அமைப்பதால் உயரம் அதிகரித்து விபத்து ஏற்பட காரணமாகி வருகிறது. அதில், கடந்த வாரம் மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ், மின் கம்பத்தில் மோதிய போது, மின்சாரம் தாக்கியதில் இரண்டு பேர் பலியாகினர்.
இந்நிலையில், 'புதிய சாலை அமைக்கும் போது சாலை ஓரங்கள் உயரமாக இருக்க கூடாது,' என, ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதைதொடர்ந்து, நெடுஞ்சாலை துறையினர் சாலை ஓரத்தில் உள்ள மண்ணை பொக்லைன் மூலம் எடுத்து, சாலையோரம் நிரப்பி சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மழை காலங்களில், மீண்டும் சாலை ஓரங்களில் பள்ளங்கள் ஏற்படுவதுடன், மழை தொடர்ந்தால் மண் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லும். இதனால், மீண்டும் பள்ளம் ஏற்படும்.
டிரைவர்கள் கூறுகையில்,'இத்தகைய பகுதிகளில் தரமான முறையில் கான்ரீட் தளங்கள் அமைத்தால் பாதிப்பு இருக்காது; விபத்தும் ஏற்படாது,' என்றனர்.