/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை பாதுகாப்பு: டிரைவர்களுக்கு விழிப்புணர்வு விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
/
சாலை பாதுகாப்பு: டிரைவர்களுக்கு விழிப்புணர்வு விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
சாலை பாதுகாப்பு: டிரைவர்களுக்கு விழிப்புணர்வு விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
சாலை பாதுகாப்பு: டிரைவர்களுக்கு விழிப்புணர்வு விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
ADDED : ஜன 20, 2024 01:28 AM
ஊட்டி';ஊட்டியில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சமீப காலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, நடப்பாண்டில், ஜன., 11 ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் போலீஸ் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் பஸ் ஸ்டாண்ட், சேரிங்கிராஸ் சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் போலீசார் இணைந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, டிரைவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:
கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிந்து ஓட்ட வேண்டும். வாகனத்தில் செல்பவர்கள் மொபைல் போன் பேசிக்கொண்டு செல்லக்கூடாது, சிக்னலை மதிக்க வேண்டும். 18 வயது முடிந்தபின் உரிமம் பெற்று வாகனம் ஓட்டவும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் இரண்டாவது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும்.
தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும், பனிமூட்டம் இருக்கும் நேரத்தில் சமவெளி பகுதிகளில் இருந்து வருபவர்கள் அங்கு சாலையோர வழிகாட்டி பலகைகள் மற்றும் சாலையில் உள்ள தடுப்பு கோடுகளை கவனமுடன் பார்த்து ஓட்ட வேண்டும். ஓய்வு எடுக்காமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.