/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 16, 2024 12:33 AM

ஊட்டி;ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு, கண் சிகிச்சை முகாம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று, தலைக்கவசம் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடத்தப்பட்டது. இந்த பேரணியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.
பேரணி பூங்கா சாலை, கமர்சியல் சாலை வழியாக சென்று சேரிங்கிராஸில் நிறைவடைந்தது. பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், வாகன ஆய்வாளர் முத்துசாமி, அருண் சிவகுமார் தலைமையில், 15 ஓட்டுனர் பள்ளி வாகனங்கள் மற்றும் 60 இரு சக்கர வாகனங்கள் பங்கேற்றன.