/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழைநீர் சேமிக்கும் குளமாக மாறிய சாலை; கண்டு கொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி
/
மழைநீர் சேமிக்கும் குளமாக மாறிய சாலை; கண்டு கொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி
மழைநீர் சேமிக்கும் குளமாக மாறிய சாலை; கண்டு கொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி
மழைநீர் சேமிக்கும் குளமாக மாறிய சாலை; கண்டு கொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி
ADDED : ஜூலை 08, 2025 08:39 PM

கூடலுார்; கூடலுாரில் சேதமடைந்து வரும், ஊட்டி -மைசூரு தேசிய நெடுஞ்சாலை குளம் போல மாறி வருவதால், பயணிகள் அதிருப்தி அடைகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகளவில் வந்து செல்கின்றனர். இச்சாலையில், ஊசிமலை -தொரப்பள்ளி இடையே உள்ள, 16 கி.மீ., சாலை சேதமடைந்து, உள்ளூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
சேதமடைந்த பகுதியை அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்து பயனில்லை.
இதனால், சாலையை சீரமைக்க டிரைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 'இச்சாலையை சீரமைக்க திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும்,' என, இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதுவரை நிதி ஒதுக்கவில்லை;பணியும் துவங்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது, பெய்து வரும் பருவமழையால், சேதமடைந்து வரும் சாலை, மழை நீர் சேமிக்கும் குளம் போல் மாறி உள்ளது. இப்பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
டிரைவர்கள் கூறுகையில், ' கடந்த மூன்று ஆண்டுகளாக சேதமடைந்துள்ள இந்த சாலையில் தற்காலிக பணி மட்டுமே நடக்கிறது. தற்போது பெய்து வரும் மழையில் சாலை மேலும், சேதமடைந்து குளம் போல மாறி விட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள், சாலையை ஆய்வு செய்து சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.