/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேங்கும் தண்ணீரால் சேதமடையும் சாலை மழை நீர் வழிந்தோட கால்வாய் அவசியம்

ADDED : டிச 29, 2024 11:15 PM

கூடலுார்; கூடலுார் அருகே, கீழ்நாடுகாணி சாலை சேதமடைவதை தடுக்க கால்வாய் அமைக்க வேண்டும்.
கூடலுார் நாடுகாணியில் இருந்து கேரளா மாநிலம் நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது.
இவ்வழியாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நாடுகாணியில் வருவாய் துறை சார்பில், நுழைவு வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து நீலகிரிக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
ஆனால், கீழ்நாடுகாணி முதல் நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. அதனை, நிரந்தரமாக சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், இச்சாலையை கடந்து செல்ல சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு மழைநீர் வழிந்தோட கால்வாய் இல்லாததால் பாதிப்பு ஏற்படுகிறது.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'இப்பகுதியில், சாலையோரம் கால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் மற்றும் ஊற்றுநீர் சாலையில் வழிந்தோடி சாலை சேதுமடைந்து வருகிறது. எனவே, தண்ணீர் சாலையில் வழிந்தோடுவதை தடுக்க, சாலையோர கால்வாய் அமைத்து, சேதமடைந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.