தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலை ஓரத்தில் மரங்கள்: அகற்றினால் ஆபத்தில்லை

சாலை ஓரத்தில் மரங்கள்: அகற்றினால் ஆபத்தில்லை

சாலை ஓரத்தில் மரங்கள்: அகற்றினால் ஆபத்தில்லை


ADDED : செப் 25, 2024 09:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 09:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: '-பந்தலுார் அருகே எருமாடு செல்லும் சாலை ஓரத்தில், வெட்டி போடப்பட்டுள்ள மரங்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சேரம்பாடியில் இருந்து எருமாடு செல்லும் சாலையில், கையுன்னி அருகே சாலை ஓரத்தில், ஆபத்தான நிலையில் இருந்த மரங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அடியோடு வெட்டப்பட்டன.

வெட்டப்பட்ட மரங்கள் துண்டுகளாகப்பட்டு சாலையின் இரண்டு பக்கங்களிலும் போடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் வேகமாக வரும் போது, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் சூழலில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள இந்த மரங்களை, கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள மரத்துண்டுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us