/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவிலில் கொள்ளை; இளைஞருக்கு இரு ஆண்டு சிறை
/
கோவிலில் கொள்ளை; இளைஞருக்கு இரு ஆண்டு சிறை
ADDED : அக் 04, 2024 10:13 PM

குன்னுார் : குன்னுாரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் கேத்தி பகுதியில் வசித்து வந்தவர் லியோ சகாயநாதன்,22. ஓராண்டுக்கு முன்பு கேத்தி டாஸ்மாக் கடையை உடைத்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சரக்குகள் திருடியது தொடர்பாக இவரை கேத்தி போலீசார் கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்த அவர், உபதலை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி, பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தார்.
சின்ன உபதலை மாரியம்மன் கோவிலில் மணி, தட்டுகள் திருடியது தொடர்பாக அருவங்காடு போலீசார் கைது செய்தனர்.
மேலும், 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் அப்பர் குன்னுார் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்குகள் குறித்த விசாரணை, குன்னுார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த, நீதிபதி அப்துல்சலாம், லியோ சகாயநாதனுக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.