/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்டவாளத்தில் பாறை சுற்றுலா பயணியர் தவிப்பு
/
தண்டவாளத்தில் பாறை சுற்றுலா பயணியர் தவிப்பு
ADDED : அக் 26, 2024 08:52 PM

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுாரில் அவ்வப்போது பெய்யும் மழையால் பல இடங்களிலும் மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று, காலை குன்னுார் -- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்தது.
ரயில் செல்ல முடியாததால் சுற்றுலா பயணியர் அப்பகுதியில் காத்திருந்தனர். ரயில்வே ஊழியர்கள் பாறையை உடைத்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். உடைத்து அகற்ற முடியாததால், பொக்லைன் கொண்டு வரப்பட்டு, பாறையை, 100 மீ., துாரம் இழுத்து சென்று ஆற்றில் தள்ளிவிடப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு, 210 சுற்றுலா பயணியருடன் ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில், குன்னுாருக்கு, 10:00 மணிக்கு வர வேண்டிய நிலையில், ஒரு மணி நேரம் தாமதமாக காலை, 11:00 மணிக்கு வந்து சேர்ந்தது. பின், ஊட்டி புறப்பட்டு சென்றது.