/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு மாநில மலைப்பாதையில் 'ரோலர் சேப்டி பேரியர்'; அபாயகரமாக உள்ள ஏழு இடங்களில் பாதுகாப்பு பணி: விபத்தை தடுக்க நடவடிக்கை!

ADDED : ஜூலை 31, 2025 09:34 PM

கூடலுார்: தமிழக--கேரளா எல்லை ஒட்டிய மலைப்பாதையில், வாகன விபத்துகளை தடுக்க, 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'ரோலார் சேப்டி பேரியர்' அமைக்கும் பணியை துவக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில், கூடலுார் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் இருந்து, கோழிக்கோடு, தேவர்சோலை, ஊட்டி-மைசூரு தேசிய நெடுஞ்சாலைகள் பிரிந்து செல்கின்றன. அதில், பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகளில் செல்கின்றன. சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் பல ஆபத்தான பள்ளங்கள், வளைவுகள் உள்ளன.
இந்நிலையில், இரவு நேரங்களில் மலை பாதையில் வாகனங்கள் செல்லும் போது, இருள் சூழ்ந்த பகுதிகளில் சில வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழப்புகளும் அடிக்கடி ஏற்படுகிறது.
மேலும், கேரளாவில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா இரு சக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் அதிவேத்தில் வாகனத்தை இயக்கும் போது, சில வளைவுக்கு கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வாகனம் உருண்டு பாதிக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
முதல் கட்டமாக ஏழு இடங்களில் பணி இதனை தவிர்க்கும் வகையில், முதல் கட்டமாக கோழிக்கோடு சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில், விபத்துகள் ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு, முதற்கட்டமாக, ஏழு இடங்களில், 'ரோலார் சேப்டி பேரியர்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சுழலும் வகையிலான, 'டயர்' வடிவிலான ரப்பர் உருளையில், இரவில் வாகனங்களில் முகப்பு ஒளி பட்டு பிரதிபலிக்கும் 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் வரும், 500 மீட்டர் துாரத்தில் வாகன லைட்டின் ஒளி பட்டு இவை ஒளிருவதால் விபத்துகளை குறைக்க முடியும்.
அதிகாரிகள் கூறுகையில், 'மலைபாதையில் வாகன விபத்துகளை தடுக்க, கூடலுாரில் கோழிக்கோடு, நிலம்பூர் சாலையில், 7 இடங்களில், 1.75 கோடி ரூபாய் மதிப்பில்,'ரோலார் சேப்டி பேரியர்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதன் மூலம் வாகனங்கள் பள்ளத்தாக்கில் விழுவதை தடுப்பதுடன் விபத்துகளும் குறையும். தொடர்ந்து, மேலும், விபத்துகள் ஏற்படும் பிற எட்டு பகுதிகளிலும், 'ரோலார் சேப்டி பேரியர்' அமைக்கப்பட உள்ளது,'என்றனர்.