/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் குறையும் கொண்டை வரி கழுகுகள்
/
நீலகிரியில் குறையும் கொண்டை வரி கழுகுகள்
ADDED : ஜன 02, 2024 10:32 PM

குன்னுார்:நீலகிரியில் கொண்டை வரி கழுகுகள் குறைந்து வருகின்றன.
நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் அரிய வகை பறவைகள் அதிகம் உள்ளன. இதில், வன சூழலை பாதுகாக்க, 'வனங்களின் துாய்மை பணியாளர்கள்,' என அழைக்கப்படும் பாறு கழுகுகளில், 4 வகைகள் நமது மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது. 1990ம் ஆண்டிற்கு முன்பு அதிகம் இருந்த இந்த கழுகுகள் தற்போது அழிவின் பிடியில் உள்ளன.
பாறு குடும்பத்தை சேர்ந்த, 'க்ரெஸ்டட் கோஷாக்' எனப்படும் கொண்டை வரி கழுகு குன்னுார் மலை அடிவார பகுதிகளில் காணப்படுகிறது. ஓங்கில் இயற்கை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆசாத் கூறுகையில், ''பசுமையான காடுகளில் வசிக்கும் இவை பெரிய பூச்சிகள், ஊர்வனவற்றை வேட்டையாடுகிறது. காடுகள் அழிப்பு, அதன் வாழ்விடங்களில் அதிகரித்த மனித நடவடிக்கைகளால், இவை உயிர் வாழ அச்சுறுத்தலாக உள்ளது. இதனை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வகைபடுத்தி மதிப்பீடு செய்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூரில் இந்த பறவையினம் நகர் பகுதிகளில் வாழ்விற்கு ஏற்றதாக இருப்பதற்கான சான்றுகள் உள்ளது. நீலகிரியில் முன்பை விட இவற்றின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
வனவளங்கள் அழிப்பதால் இதன் எண்ணிக்கை குறைகிறது. எனவே, வனவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்