/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
/
ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
ADDED : ஜூலை 20, 2025 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார் சாஸ்தாபுரி அரங்கில், புளு மவுண்டன் ரோட்டரி கிளப், 2025-26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
விழாவுக்கு தலைவர் யாசின்செரிப் தலைமை வகித்தார். செயலாளர் ராபர்ட் அலெக்சாண்டர் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் வர்கிஸ் வரவு செலவுகளை சமர்ப்பித்தார். கூடலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் (பொ) சுபாஷினி பேசினார். தொடர்ந்து, 2025-26ம் ஆண்டுக்கான, தலைவராக தனராஜ், செயலாளராக பரசுராமன், பொருளாளராக சேகர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழாவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

