ADDED : செப் 01, 2026 07:22 PM
குன்னுார்: ‘நீலகிரி மாவட்டத்தில் ஆக., மாதத்திற்கான, பசுந்தேயிலை விலை கிலோவிற்கு, 18.70 ரூபாய்,’ என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குன்னுார் தேயிலை மையம் மற்றும் இன்கோசர்வ் மையத்தில் ஏலம் விடப்படும், தேயிலை துாள், விலையின் அடிப்படையில், மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு தேயிலை வாரிய கமிட்டி சார்பில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, ஆக., மாதத்திறகான பசுந்தேயிலை கிலோ, 18.70 ரூபாய் என குன்னூரில் உள்ள தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்துள்ளது.
தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் கூறுகையில், ‘‘அந்தந்த மாத ஏலத்தின் அடிப்படையில், அதே மாத விலையை, அனைத்து தொழிற்சாலைகளும் வழங்க வேண்டும்; விலை வழங்குவது குறித்து தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குனர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர்,’’என்றார்.
