தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.22.82 லட்சம் பறிமுதல்

 ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.22.82 லட்சம் பறிமுதல்

 ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.22.82 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 01, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 10:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: தமிழக -கர்நாடகா எல்லையான கக்கனல்லாவில், ஆவணம் இன்றி எடுத்து வந்த, 22.82 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முதுமலை அருகே, தமிழக -கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடி உள்ளது. இங்கு தேர்தல் நிலைய கண்காணிப்பு குழு அலுவலர் ஜானகிராமன் தலைமையில் நேற்று காலை வாகன சோதனை நடந்தது.

அதில், கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கு வந்த காரை சோதனை செய்த போது, பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஆவணம் இன்றி, 22.82 லட்சுமி ரூபாய் எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை குழுவினர் பறிமுதல் செய்து, கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'கேரளா சென்று, மரங்கள் கொள்முதல் செய்து எடுத்து வருவதற்காக, இத்தொகையை எடுத்து வந்துள்ளனர். ஆனால், தொகைக்காண ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பதால், தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, இத்தொகை வருமான வரி துறையிடம் ஒப்படைப்படும்,' என்றார்.

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us