ADDED : செப் 03, 2026 06:52 PM
குன்னுார்: தென் மாநில தேயிலை ஏல மையங்களில் கடந்த, 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, 4 நாட்கள் குன்னுார், டீசர்வ், கோவை மையங்களில், 35-வது தேயிலை ஏலம் நடந்தது.
ஓணம் விடுமுறையால் கொச்சி ஏலம் நடக்கவில்லை. மற்ற, 3 மையங்களிலும், 26.04 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு வந்ததில், 23.44 லட்சம் கிலோ விற்றது. 28.34 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஈட்டப்பட்டது.
அதில், குன்னுாரில், 19.18 லட்சம் கிலோ வந்ததில், 17.70 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவுக்கு, 117.95 ரூபாய் ஆக இருந்தது. 20.87 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ‘டீசர்வ்’ சார்பில் கொண்டு வரப்பட்ட, 1.16 லட்சம் கிலோ 100 சதவீதம் விற்றது. 105.55 ரூபாய் சராசரி விலை இருந்தது. 1.23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.
கோவை ஏல மையத்திற்கு வந்த, 5.70 லட்சத்தில் 4.58 லட்சம் கிலோ விற்றது. இதன் சராசரி விலை அதிகபட்சமாக கிலோவுக்கு, 136.30 ரூபாய் என இருந்தது. 6.24 கோடி ரூபாய் மொத்த வருவாய் இருந்தது . இந்த ஏலத்தில், வரத்து விற்பனை சரிந்த போதும், சராசரி விலை அதிகரித்துள்ளது.
