ADDED : அக் 13, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில் வரத்து அதிகரித்த நிலையில், மொத்த வருமானம், 30.12 கோடி ரூபாயாக இருந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் ஏல மையத்தில், 41வது ஏலம் நடந்தது. அதில், '23.28 லட்சம் இலை ரகம்; 5.40 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 28.68 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. மொத்தம், 19.05 லட்சம் கிலோ விற்பனையான நிலையில், மொத்த வருமானம், 30.12 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 158.06 ரூபாய் என இருந்தது.
ஒரே வாரத்தில், 5.47 லட்சம் கிலோ வரத்து கூடுதலாக வந்தது. கடந்த ஏலத்தை விட சராசரி விலை கிலோவிற்கு, 4 ரூபாய் குறைந்த போதும், விற்பனை அதிகரித்ததால், மொத்த வருமானம் அதிகரித்து, சராசரி விலை உயர்ந்தது.