/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 42 லட்சத்தில் பணிகள் துவக்கம்
/
ரூ. 42 லட்சத்தில் பணிகள் துவக்கம்
ADDED : மார் 13, 2024 10:18 PM
அன்னூர் : பசூர் ஊராட்சியில், 42 லட்சம் ரூபாய் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.
பசூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் இரண்டில், 42 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசூர் புதுப்பாளையம் காளக்குறிச்சி, கம்மாள தொட்டிபாளையம், தொக்குப்பாளையம், அம்மா செட்டி புதூர் ஆகிய கிராமங்களில் இப்பணிகள் செய்ய நிர்வாக அனுமதி பெறப்பட்டது. ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, பணி உத்தரவும், நேற்று முன் தினம் வழங்கப்பட்டது.
இதையடுத்து நேற்று பொள்ளாச்சியில் நடந்த திட்ட துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின் இந்தப் பணிகளை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். இதையடுத்து ஊராட்சி நிர்வாகம், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

