தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை ஏலத்தில் ரூ.50.15 கோடி வருவாய்: வட மாநில வரத்து குறைவால் கிராக்கி

தேயிலை ஏலத்தில் ரூ.50.15 கோடி வருவாய்: வட மாநில வரத்து குறைவால் கிராக்கி

தேயிலை ஏலத்தில் ரூ.50.15 கோடி வருவாய்: வட மாநில வரத்து குறைவால் கிராக்கி


UPDATED : நவ 25, 2026 08:00 PM

ADDED : நவ 25, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 08:00 PM ADDED : நவ 25, 2026 08:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: தென் மாநில அளவில் நடந்த, 47-வது தேயிலை ஏலங்களில், மொத்தம், 50.15 கோடி ரூபாய்க்கு தேயிலை துாள் விற்பனையாகியுள்ளது.

குன்னுார் தேயிலை ஏல மையத்தில், 47 வது ஏலம் நடந்தது. 18.04 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்த நிலையில், 16.79 லட்சம் கிலோ விற்பனையானது. அங்கு கிலோவுக்கு சராசரி விலையாக, 147.38 ரூபாய் கிடைத்தது. மொத்த வருவாய், 24.74 கோடி ரூபாயாக இருந்தது.

மேலும், குன்னுார் டீசர்வ் ஏல மையத்திற்கு, 1.07 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனைக்கு வந்ததில், 100 சதவீதம் விற்பனையானது. கிலோவிற்கு சராசரி விலையாக, 137.39 ரூபாய் கிடைத்த நிலையில் மொத்த வருவாய், 1.48 கோடி ரூபாயாக இருந்தது. கோவை தேயிலை ஏல மையத்திற்கு, 5.02 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்துக்கு வந்ததில், 4.78 லட்சம் கிலோ விற்பனையானது. இங்கு சராசரி விலை கிலோ, 147.10- ரூபாயாக இருந்தது. மொத்த வருவாய், 7.03 கோடி ரூபாயாக பதிவானது.

இதேபோல, கொச்சி தேயிலை ஏல மையத்திற்கு, 11.29 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்துக்கு வந்த நிலையில், 10.50 லட்சம் கிலோ விற்பனையானது. 4 மையங்களில், அதிகபட்சமாக இங்கு சராசரி விலை கிலோ, 161.11- ரூபாய் ஆக இருந்தது. மொத்த வருவாய் 16.91 கோடி ரூபாய் என இருந்தது.

ஒட்டுமொத்தமாக, தென் மாநில தேயிலை ஏலத்தில், 35.42 லட்சம் கிலோ ஏலத்துக்கு வந்ததில், 33.14 லட்சம் கிலோ விற்பனையானது. மொத்த வருவாய், 50.15 கோடி ரூபாயை எட்டியுள்ளது. கடந்த, 46-வது ஏலத்துடன் ஒப்பிடுகையில், 4 ஏல மையங்களிலும் சேர்த்து தேயிலை தூள் வரத்து, 3.77 லட்சம் கிலோவும், விற்பனை, 2.71 லட்சம் கிலோவும் உயர்ந்துள்ளது. மொத்த வருவாய் 4.86 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us