தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 5.9 லட்சம் பறிமுதல்

 ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 5.9 லட்சம் பறிமுதல்

 ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 5.9 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 17, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: தமிழக -கர்நாடகா எல்லையான கக்கனல்லாவில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, 4 பேர் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த, 5.9 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக -கர்நாடக எல்லையான முதுமலை கக்கனல்லா சோதனை சாவடியில் தேர்தல் நிலைய கண்காணிப்பு குழு அலுவலர் சிவபாக்கியம், போலீசார் ஜெய்சங்கர் மனோகர் ஆகியோர் வாகன சோதனை மேற் கொண்டனர். அதில், 'கர்நாடகா வழியாக, நீலகிரிக்கு வந்த சுங்கரவீரபாபு என்பவர் காரில் எடுத்து வந்த, 1.96 லட்சத்து 500 ரூபாய், சண்முகா என்பவர் வாகனத்தில் இருந்த, 1.44 லட்சம் ரூபாய், தசரிமலகுண்டன் என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய், திலீப்குமார் என்பவரிடமிருந்து, 1.5 லட்சத்து ரூபாய் என, மொத்தம் 5.90 லட்சத்து 500 ரூபாய்,' பறிமுதல் செய்யப்பட்டது.இந்த தொகையை கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'இத்தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமையாளர்கள் பெற்று கொள்ளலாம்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us