ADDED : மார் 17, 2026 05:19 PM

கூடலுார்: கூடலுார் வழியாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற, 7.28 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக-கேரளா எல்லையான நாடுகாணி சோதனை சாவடியில், ரமேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணம் இன்றி, கேரளா மலப்புரம் விஜேஷ் என்பவர் எடுத்து சென்ற, 85 ஆயிரம் ரூபாய்; தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லாவில் தியாகு தலைமையிலான குழுவினர், திருவள்ளுவர் செந்திலிடம் இருந்து, 52,000 பறிமுதல் செய்தனர்.
முதுமலை, தெப்பக்காடு பகுதியில், பறக்கும் படை அலுவலர் பிரவீன்குமார், எஸ்.எஸ்.ஜ., லோகேஷ், தலைமை காவலர் சிவபிரசாத் இன்று( மார்ச் 17) காலை ஆய்வு செய்தனர். அவ்வழியாக சென்ற லாரியை சோதனை செய்து, கேரளா, பின்னபலா ஜெம்சீர் என்பவரிடமிருந்து, 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
நாடுகாணி சோதனை சாவடியில் தியாகு தலைமையிலான குழுவினர் லாரியை சோதனை செய்து, கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஜாக்கன் என்பரிடமிருந்து, 2.91 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகையை கூடலுார் ஆர்.டி.ஓ. குணசேகரிடம் ஒப்படைத்தனர். கூடலுார் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை, ஆவணம் இன்றி எடுத்து சென்ற, 13. 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
