தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ரூ. 87 லட்சம் மோசடி : ஒப்பந்ததாரர் கைது

ரூ. 87 லட்சம் மோசடி : ஒப்பந்ததாரர் கைது

ரூ. 87 லட்சம் மோசடி : ஒப்பந்ததாரர் கைது


UPDATED : நவ 24, 2026 06:30 PM

ADDED : நவ 24, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 06:30 PM ADDED : நவ 24, 2026 06:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊராட்சி ஒன்றியங்களில் குப்பை அள்ளும் வாகனம் வாங்கி தருவதாக , 87 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி, குன்னுார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு குப்பைகள் அள்ளும் வாகனங்கள் தேவைப்பட்டன. இதற்கு ‘ஆன்லைன்’ வாயிலாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

அரசு துறைகளுக்கான ஒப்பந்தங்கள் பெறும், ‘ஜெம் போர்டல்’ துறையில் பதிவு பெற்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் வசந்த்,26, என்பவர், 3 நிறுவனங்கள் பெயரில் விண்ணப்பித்தார். மற்ற அனைவரையும் விட மிகவும் குறைந்த விலைக்கு ஒப்பந்த புள்ளி வழங்கியதால், அவருக்கு ஆர்டர் வழங்கப்பட்டு, 60 சதவீதம் முன் பணமாக, 1.11 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றியங்களுக்கு, 8 குப்பை அள்ளு வாகனங்கள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டிருந்தது. இரண்டு வாகனங்கள் மட்டும் வாங்கி கொடுத்திருந்தார். மீதமுள்ள,6 வாகனங்களை வாங்காமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்து அடித்து வந்துள்ளார். வசந்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. குடும்பத்துடன் அந்தமானுக்கு சென்று விட்டார்.

ஆய்வில், 87 லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்ததையடுத்து, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிப்பட்டது. எஸ்.பி., பிருந்தா உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ., வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தை தேடி வந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் ஊட்டி வந்த வசந்த்தை, மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us