தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.35.42 கோடி பணிக்கொடை

 தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.35.42 கோடி பணிக்கொடை

 தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.35.42 கோடி பணிக்கொடை


ADDED : பிப் 14, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் உள்ள, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் (டான்டீ), தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கும் விழா, விலையில்லா இணைய வழி பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விழாவிற்கு தலைமை வகித்து, நீலகிரி எம்.பி.,ராஜா பேசுகையில், '' மலை பகுதிகளில் பணிபுரியம், 'டான்டீ' தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பணப்பலன்கள் எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில், இதுவரை மாநில அரசால், 150 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் தற்போது, 35.42 கோடி ரூபாயில் பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் பட்டா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதை மாவட்ட வருவாய் அலுவலர் இங்கு தெரிவித்தார். இவ்வளவு பெரிய சிக்கல்கள் இருந்த போதும், 7,000 பட்டாக்கள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வருவதற்குள், மேலும், 3,000 பட்டாக்களை வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பட்டாக்கள் வழங்கப்படும்,'' என்றார்.

தொடர்ந்து, டான்டீ சார்பில், 3 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சிறப்பு தேயிலை துாள் அறிமுகப்படுத்தப்பட்டது. குன்னுார், கோத்தகிரி பயனாளிகள், 440 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.

5,000 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, மகளிருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில், அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் கலெக்டர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us