/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அய்யன் கொல்லியில் ஆர்.எஸ்.எஸ். நுாற்றாண்டு விழா
/
அய்யன் கொல்லியில் ஆர்.எஸ்.எஸ். நுாற்றாண்டு விழா
ADDED : அக் 07, 2025 12:01 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே அய்யன்கொல்லி முருகன் கோவிலில் வளாகத்தில்,ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.
மாவட்ட துனை தலைவர் மனோஜ்குமார் பேசுகையில், ''கடந்த, 1972-ல் அய்யன்கொல்லி பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் துவக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த பலரும் இணைந்துள்ளனர்.
அது முதல் இந்த அமைப்பு பல்வேறு தேச பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சங்கத்தில் பணியாற்றிய பலரும் தற்போது உயர்பதவிகளில் உள்ளனர்,'' என்றார்.
கோவை கோட்ட பொறுப்பாளர் விஜய் பேசுகையில், '' தேசத்தை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உருவாக வேண்டும். அதற்காக இந்துக்களை ஒன்றிணைக்க தேச பற்றுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்து சமுதாய மக்கள் மத்தியில் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, தேசத்தை காப்பாற்ற முடியும். கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.ன் பணிகள் அனைவராலும் கவனிக்கப்படுகிறது. 80 ஆயிரம் இடங்களில் இந்துக்களை ஒன்றிணைத்து, சேவைகளை செய்து வருகிறோம்.
அதேபோல் இயற்கையையும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், ஏற்ற தாழ்வுகளை களையவும் அனைவரும் முன் வரவேண்டும்,'' என்றார்.
-எருமாடு சிவன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். அகில பாரத உடற்பயிற்சியாளர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், பெக்கி ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,அடைக்கலம் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியன், மாவட்ட நிர்வாகி சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.