/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்; திரளானோர் பங்கேற்பு
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்; திரளானோர் பங்கேற்பு
ADDED : அக் 07, 2024 12:29 AM

குன்னுார் : குன்னுாரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் விஜயதசமி விழாவை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, குன்னுாரில் நேற்று ஊர்வலம் நடந்தது. சிம்ஸ் பூங்காவில் துவங்கிய ஊர்வலம், பெட்போர்டு, ஒய்.எம்.சி.ஏ., லாலி மருத்துவமனை, பஸ் நிலையம் சாலை, வி.பி., தெருவழியாக லாரி திடலை அடைந்தது. தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு பின், 'ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது; சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை; மதமாற்றத்தை தடுப்பதில் இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏற்பாடுகளை, சுவாமி பிரேமரூபாநந்தஜி மஹராஜ், ராமகிருஷ்ணன், கருப்பையா, அமல், சங்கர், குப்புராஜ், ரவி, சீனிவான் உட்பட பலர் செய்திருந்தனர். எஸ்.பி., நிஷா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.