/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'படித்ததை அனைவருக்கும் பகிர்ந்தால் பலன்' : மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ., அறிவுரை
/
'படித்ததை அனைவருக்கும் பகிர்ந்தால் பலன்' : மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ., அறிவுரை
'படித்ததை அனைவருக்கும் பகிர்ந்தால் பலன்' : மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ., அறிவுரை
'படித்ததை அனைவருக்கும் பகிர்ந்தால் பலன்' : மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ., அறிவுரை
ADDED : மார் 05, 2024 12:48 AM
பந்தலுார்;பந்தலுாரில் செயல்பட்டு வரும், செம்மொழி ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் போட்டி தேர்வுகளுக்கான கருத்தரங்கம் நடந்தது.
முதன்மை கருத்தாளர் சிவகணேசன் வரவேற்றார்.
'டியூஸ் மெட்ரிக்' மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுதீந்திரநாத் முன்னிலை வகித்து பேசுகையில், ''ஆசிரியர்கள் இணைந்து, போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு, எந்தவித கட்டணமும் பெறாமல் முற்றிலும் இலவசமாக பயிற்சி அளித்து வரும் நிலையில், பள்ளி நிர்வாகம் மூலம், மாணவர்கள் படிக்க நுாலகம் மற்றும் ஆடிட்டோரியம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதன் ஒருங்கிணைப்பாளர் ஆசிரிய பயிற்றுனர் பரமேஸ்வரன் பேசுகையில், ''சமவெளி பகுதிக்கு சென்று கட்டணம் செலுத்தி, தங்குவதற்கு அறை எடுத்து போட்டி தேர்விற்கு படிக்கும் நிலையில், இது போன்ற பின்தங்கிய கிராமத்து மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாக இருந்தது.
அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து முற்றிலும் இலவசமாக வழங்கும் இந்த பயிற்சியில் படிக்கும் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் சேர்வது இதன் வெற்றியை வெளிக்காட்டுகிறது,'' என்றார்.
கூடலுார் ஆர்.டி.ஓ. செந்தில்குமார் பேசுகையில், ''போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், எந்த மாதிரியான வினாக்கள் வரும், என்பதை போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பபடிக்க வேண்டும். வெறும் படிப்பு மட்டுமின்றி, பொது அறிவு சிந்தனையுடன், இலக்குடன் பயணிக்க வேண்டும். படித்தவற்றை அனைத்தையும் பிறருக்கும் சொல்லி கொடுப்பதால், திறன் மேம்படும்,'' என்றார்.
தொடர்ந்து, போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காந்தி சேவா மைய அமைப்பாளர் நவுசாத் உட்பட பலர் பங்கேற்றனர். கருத்தாளர் அன்வர் நன்றி கூறினார்.

