வேளாண்துறை மாணவர்கள் கிராமப்புற மதிப்பீட்டு பயிற்சி
வேளாண்துறை மாணவர்கள் கிராமப்புற மதிப்பீட்டு பயிற்சி
ADDED : ஆக 19, 2026 04:53 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே, கேரளா அம்பலவயல் பகுதியில், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கோவை காருண்யா கல்லுாரி டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் மாணவர்கள் சார்பில், கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி நடந்தது. அம்பலவயல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்தார்.
அதில், வேளாண்துறை எதிர்கொள்ளும் சவால்கள், வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், வேளாண் துறையில் விவசாயிகள் பங்கேற்கும் பிரச்னைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள், தற்போதைய சாகுபடி முறைகள் குறித்து உரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், துணைத் தலைவர் பீனாஅபு, சுகாதார நிலை குழு தலைவர் சிஜிஎல்தோஸ், காருண்யா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பாலகணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
