/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாகித்ய அகாடமி விருதாளர் நிர்மால்யாவுக்கு 'பொற்கிழி விருது'
/
சாகித்ய அகாடமி விருதாளர் நிர்மால்யாவுக்கு 'பொற்கிழி விருது'
சாகித்ய அகாடமி விருதாளர் நிர்மால்யாவுக்கு 'பொற்கிழி விருது'
சாகித்ய அகாடமி விருதாளர் நிர்மால்யாவுக்கு 'பொற்கிழி விருது'
ADDED : டிச 24, 2024 10:41 PM

ஊட்டி; 'சிறந்த மொழி பெயர்ப்புக்காக, எழுத்தாளர் நிர்மால்யாவுக்கு, 'பொற்கிழி விருது' அறிவிக்கப்பட்டது, மலை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியை சேர்ந்த எழுத்தாளர் நிர்மால்யா மணி. இவர், மலையாளத்திலிருந்து தமிழ் மொழிக்கு, 25 புத்தகங்கள் மொழியாக்கம் செய்துள்ளார். 2010ல், சிறந்த -மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
மேலும், கேரள சாகித்ய அகாடமி; ஊட்டி புத்தக திருவிழா நிகழ்ச்சியில், மாநில அரசின் சிறப்பு கவுரவம் இவருக்கு அளிக்கப்பட்டது.
தற்போது, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்; பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில், 'கலைஞர் பொற்கிழி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
மொழியாக்கத்துக்கான விருதுகள் உங்களை தேடி வரும் ரகசியம் என்ன என்ற கேள்விக்கு, நிர்மால்யா கூறுகையில்,''பிற மொழி இலக்கிய செல்வங்களை கொண்டு வந்து சேர்க்கும் போது, தாய் மொழிக்கும்; பண்பாட்டுக்கும் உரமூட்டக் கூடியதாக அந்த மொழியாக்கம் விளங்க வேண்டும். அப்போதுதான் அம்மொழி செழித்தோங்கும். அத்தகைய தகுதியை கொண்ட படைப்புகளை மட்டுமே நான் மொழியாக்கத்திற்கு தேர்வு செய்கிறேன்,'' என்றார்.
நீலகிரி மலைச்சாரல், தமிழ் கவிஞர்கள் சங்க செயலாளர் பிரபு கூறுகையில்,''நிர்மால்யாவுக்கு பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மலை மாவட்டத்துக்கு மற்றும் ஒரு பெருமை சேர்ப்பதாக உள்ளது,'' என்றார்.