/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விற்பனையில் ஏறுமுகம்; விலையில் தொடர் சரிவு; ஏலங்களில் ரூ. 28.10 கோடி மொத்த வருமானம்
/
விற்பனையில் ஏறுமுகம்; விலையில் தொடர் சரிவு; ஏலங்களில் ரூ. 28.10 கோடி மொத்த வருமானம்
விற்பனையில் ஏறுமுகம்; விலையில் தொடர் சரிவு; ஏலங்களில் ரூ. 28.10 கோடி மொத்த வருமானம்
விற்பனையில் ஏறுமுகம்; விலையில் தொடர் சரிவு; ஏலங்களில் ரூ. 28.10 கோடி மொத்த வருமானம்
ADDED : நவ 24, 2024 11:06 PM

குன்னுார் ; 'குன்னுார் தேயிலை ஏலங்களில், வரத்து அதிகரித்த போதும் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது; விற்பனை அதிகரித்ததால், 28.10 கோடி ரூபாய்,' என, மொத்த வருமானம் உயர்ந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள், குன்னுார் ஏல மையம் மற்றும் 'டீசர்வ்' ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, விற்பனை; விலை ஆகியவை தொடர் ஏறுமுகமாக இருந்தது.
தற்போது விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த, 6 ஏலங்களில் வாரந்தோறும் சராசரி விலையில், 4 முதல் 6 ரூபாய் வரை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், குன்னுார் ஏல மையத்தில் கடந்த வெள்ளியன்று நிறைவு பெற்ற, 47வது ஏலத்தில், 27.81 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்ததில், 20.46 லட்சம் கிலோ விற்பனையானது.
கடந்த ஏலத்தை விட, 3.72 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது; 46வது ஏலத்தை விட, 2.91 லட்சம் கிலோ விற்பனை உயர்ந்தது; 73.57 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு,126.45 ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம், 25.88 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 2.72 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது.
டீசர்வ் ஏலம்
நீலகிரியில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் 'டீசர்வ்' ஏலத்தில் ஏலம் விடப்படுகிறது. அங்கு நடந்த, 47வது ஏலத்தில், 2.12 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.94 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை, 114.71 ரூபாய் என இருந்தது. ஒரே வாரத்தில், 98 ஆயிரம் கிலோ வரத்து அதிகரித்தது. 86 ஆயிரம் கிலோ கடந்த வாரத்தை விட கூடுதலாக விற்றது. கிலோவிற்கு, 79 பைசா அதிகரித்தது; வரத்தும், விற்பனையும் அதிகரித்ததால், இதுவரை இல்லாத அளவு, 2.22 கோடி ரூபாய் மொத்த வருமானமும் கிடைத்தது. இந்த இரு ஏலங்களிலும் சேர்த்து, 28.10 கோடி ரூபாய் மொத்த வருமானம் இருந்தது.