sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரை; குன்னுார் கோவில்களில் சிறப்பு வழிபாடு

/

சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரை; குன்னுார் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரை; குன்னுார் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரை; குன்னுார் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ADDED : ஜூன் 27, 2025 09:10 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 09:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; தமிழகம் முழுவதும் நடந்து வரும், சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக, குன்னுாரில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை தயானந்த சரஸ்வதி சுவாமியின் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் சார்பில், நேற்று முன்தினம் தமிழக முழுவதும், 108 இடங்களில், 63 நாயன்மார்,18 சித்தர்கள், 15 சமய பெரியோரின் பஞ்சலோக சிலைகளின், 108 திரு உருவ யாத்திரை துவங்கியது.

வரும், 5ம் தேதி வரை நடக்கும் இந்த சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரை,38 மாவட்டங்களில், 8,000 கிராமங்களில், கோவில்களுக்கு கொண்டு சென்று மக்களின் தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குன்னுார் கோவில்களில் வழிபாடு


குன்னுாரில் தினமும் ஆறு கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நேற்று விநாயகர் கோவில், தந்தி மாரியம்மன் கோவில், ரேலி காம்பவுண்ட் மாசாணி அம்மன் கோவில், வெலிங்டன் ஐயப்பன் கோவில், மவுன்ட் பிளசன்ட் விநாயகர் கோவில், ஸ்டேன்லி பார்க் சிவன் கோவில்களில் வழிபாடுகள் நடந்தன.

தொடர்ந்து, தந்தி மாரியம்மன் கோவிலுக்கு வந்த யாத்திரையில், கேரள மாநிலம் செங்கனுார் வீர மிண்ட நாயன்மாரின் திருவுருவ சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம், திருவுருவ படம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சனாதனம் காப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

மைய பொறுப்பாளர் சரவணன் பேசுகையில், ''மிகவும் தொன்மையான ஹிந்து சமயத்தில், எண்ணற்ற மகான்களின் ஈடு இணையற்ற செயல்பாடுகளால் சனாதனம் தழைத்தோங்கி நிற்கிறது. சிவனடியார்களை வணங்கினால் தான் சிவ மோட்சம் அடைய முடியும். இவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், வீர மீண்ட நாயனாருக்கு இங்கு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 108 வணங்கும் வகையில் சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய் யாத்திரை நடத்தப்படுகிறது,'' என்றார்.

ஏற்பாடுகளை மரம் வளர்த்த நாயகி சேவை மைய பொறுப்பாளர்கள் சரவணன், முரளி, ஆனந்தன், ராஜேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us