/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துாய்மை விழிப்புணர்வு மனித சங்கிலி; ராணுவ வீரர்கள் பங்கேற்பு
/
துாய்மை விழிப்புணர்வு மனித சங்கிலி; ராணுவ வீரர்கள் பங்கேற்பு
துாய்மை விழிப்புணர்வு மனித சங்கிலி; ராணுவ வீரர்கள் பங்கேற்பு
துாய்மை விழிப்புணர்வு மனித சங்கிலி; ராணுவ வீரர்கள் பங்கேற்பு
ADDED : செப் 23, 2024 10:37 PM

குன்னுார் : குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் துாய்மை விழிப்புணர்வுக்கான மனிதசங்கிலி நடந்தது.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் 'ஸ்வச்தா ஹி' சேவா பிரசாரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
வெலிங்டன் பேரக்ஸ் ராணுவ அருங்காட்சியம் முதல், எம்.எச்., வரை தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக மனித சங்கிலி நடந்தது.
மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே ஆகியோர் துவக்கி வைத்தனர்.
'ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், துாய்மை பணியாளர்கள், ஜே.சி.ஐ., நிர்வாகிகள், வியாபாரிகள், வாரிய முன்னாள் துணை தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள், கிளீன் குன்னூர் அமைப்பினர்,' என, 550 பேர் பங்கேற்றனர்.
ராணுவ வளாகம் மற்றும் வணிக வளாகங்களை துாய்மையாக வைப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கன்டோன்மென்ட் வாரிய சுகாதார துறை மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி, பூரணி உட்பட ஊழியர்கள் செய்தனர்.