/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: மக்கள் அதிருப்தி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மக்கள் அதிருப்தி

ADDED : அக் 23, 2024 09:52 PM

ஊட்டி: ஊட்டியின் பிரதான சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நொண்டிமேடு சாலையிலிருந்து, ஆவின் வழியாக செல்லும் பிரதான சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. அதில், நொண்டிமேட்டில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் ஆவின் பகுதி வரை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.
குறிப்பிட்ட பகுதியில் கழிவுநீர் சாலையின் நடுவே குளம் போல் தேங்கியுள்ளது. கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியை வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் கழிவுநீர் மேல் வாகனத்தை செலுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் இந்த சாலை உள்ளது. பாதாள சாக்கடை பராமரிப்பு பணி நகராட்சி கட்டுப்பாட்டில் வருகிறது.
கடந்த ஒரு வாரமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பிரச்னையை இரு துறைகளும் கண்டுகொள்ளாமல் உள்ளன. குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீர் இங்கு வரும் சுற்றுலா பயணியரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த ஒரு வாரமாக சாக்கடை கழிவுநீர் பிரதான சாலையில் வழிந்தோடுகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் வருவதால் இரு துறைகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, மாவட்ட கலெக்டர் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.