/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெல்லியாளம் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
/
நெல்லியாளம் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
நெல்லியாளம் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
நெல்லியாளம் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
ADDED : அக் 02, 2024 11:57 PM

பந்தலுார் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, -பந்தலுார் நெல்லியாளம் நகராட்சியில், துாய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சுகாதார ஆய்வாளர் அறிவழகன் வரவேற்றார். நகராட்சி கமிஷனர் முனியப்பன் தலைமை வகித்து பேசுகையில், '' விடுமுறை ஏதும் இல்லாமல், பணிக்கான நேரம் பார்க்காமல், மழை, புயல் என அனைத்து நேரங்களிலும், துாய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களை என்றும் பாராட்ட வேண்டும். அந்த வகையில் ஆண்டிற்கு ஒரு முறை இவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசு வழங்கி கவுரவ படுத்துவது பெருமையாகும்,''என்றார்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர் ஜாபீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி குடிநீர் உதவியாளர் அர்ஜூனன் நன்றி கூறினார்.