/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொட்டும் மழையில் துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்: நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரிக்கை

ADDED : ஆக 18, 2025 08:36 PM

ஊட்டி; ஊட்டியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரியில், நகராட்சி, பேரூராட்சி ஊராட்சிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுநாள் வரையில் ஒப்பந்ததாரர்கள் தின கூலியாக. 600 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது. ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாத சம்பளமாக, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் , கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், 'மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த துாய்மை பணியாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும்; பணி மேற்கொள்ள தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.