தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பணி நிரந்தம் செய்ய வேண்டும் துாய்மை பணியாளர்கள் போராட்டம்

பணி நிரந்தம் செய்ய வேண்டும் துாய்மை பணியாளர்கள் போராட்டம்

பணி நிரந்தம் செய்ய வேண்டும் துாய்மை பணியாளர்கள் போராட்டம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ஊட்டி நகராட்சியில் பணிபுரியும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர செய்ய வேண்டும்,’ என்பன உட்பட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., நகராட்சி மற்றும் உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடந்தது.

இதன் ஒரு பகுதியாக, ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் சங்கரலிங்கம், சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

அதில், ‘அனைத்து ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ; அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அமுல்படுத்த வேண்டும்; காலை உணவுக்கு பதிலாக அனைத்து பணியாளர்களுக்கு உணவுப்படியாக, 100 ரூபாய் வழங்க வேண்டும்,’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தால் நகரின் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் கிடந்தது. நகராட்சி நிர்வாகம், நிரந்தர பணியாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us