UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:34 PM
ஊட்டி: ‘ஊராட்சிகளில் காலியாக உள்ள தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,’ என, வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்ட ஊராட்சி குடிநீர் குழாய் இயக்குபவர், உதவியாளர் மற்றும் துாய்மை பணியாளர் சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டம் பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தொரை, ராஜாமணி முன்னிலை வகித்தனர். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் போஜராஜ் , ஏ.ஐ.டி.யு.சி. , மாவட்ட பொது செயலாளர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் ரகுநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ‘துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி, 12,593 ரூபாய் ஊராட்சி வாயிலாக நேரடியாக வழங்க வேண்டும். மாத சம்பளத்தை மாதந்தோறும்,10ம் தேதிக்குள் வழங்க வேண்டும். வருடாந்திர ஊதிய உயர்வு, மலை படி, குளிர்காலபடி அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் இதரப்படிகள் வழங்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டது.
