/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்று
/
மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்று
மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்று
மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்று
ADDED : செப் 30, 2025 10:11 PM

பந்தலுார் ;'டாக்டர் பரிந்துரை இல்லாமல், மருந்து விற்பனை செய்யக்கூடாது,' என, மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பந்தலுார் அருகே நாடுகாணி ஜீன்பூல் மைய கூட்ட அரங்கில், நீலகிரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கோபால் வரவேற்றார். செயலாளர் அப்சல் தலைமை வகித்து, ஆண்டறிக்கை சமர்ப்பித்து பேசுகையில், ''மருந்து வணிகர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்துகள் வழங்குவது மற்றும் சிகிச்சை அளிப்பது போன்ற செயல்பாடுகளில் யாரும் ஈடுபடக்கூடாது. அதேபோல், போதை தரும் மருந்துகளை விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்திற்கு விரைவில் சொந்த கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், சங்க உறுப்பினர்களின் குடும்பங்களில் நடைபெறும் அனைத்து, நிகழ்விலும் அனைவரும் பங்கேற்க வேண்டும்,'' என்றார். ஜீன்பூல் தாவரவியல் மைய பொறுப்பாளர் கோமதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
பொருளாளர் மகேஷ் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். நிகழ்ச்சியில், அதிக முறை ரத்த தானம் வழங்கிய மருந்து கடை உரிமையாளர் ஸ்ரீலதாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, பந்தலுார் தாலுகா தலைவர் ஹரிராமன், செயலாளர் ஆசப்ஜா, நிர்வாகிகள் கிரீஸ்குமார், ரியாஸ்,சிபி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். தலைவர் ஹரிராமன் நன்றி கூறினார்.