/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருளில் வண்ணாரப்பேட்டை சாலை காட்டெருமைகளால் அச்சம்
/
இருளில் வண்ணாரப்பேட்டை சாலை காட்டெருமைகளால் அச்சம்
இருளில் வண்ணாரப்பேட்டை சாலை காட்டெருமைகளால் அச்சம்
இருளில் வண்ணாரப்பேட்டை சாலை காட்டெருமைகளால் அச்சம்
ADDED : நவ 12, 2024 06:09 AM
குன்னுார்; குன்னுார் வண்ணாரப்பேட்டை பகுதியில் தெரு விளக்குகள் எரியாத நிலையில், இருளில் நடந்து செல்லும் மக்களை காட்டெருமைகள் தாக்கும் அபாயம் உள்ளது.
குன்னுார் அருகே, வண்ணாரப்பேட்டை, ஹவுசிங் யூனிட் பகுதிகளில் நுாற்றுகணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அரசு மருத்துவமனையில் இருந்து வண்ணாரப் பேட்டை வரையிலான சாலையில், 3 தெருவிளக்குகள் எரிவதில்லை. குறிப்பாக, பிரேத பரிசோதனை அறை, சுடுகாடு பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு உலா வரும் காட்டெருமை கூட்டத்தால் மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
அதிகாலையில் பணிக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் செல்கின்றனர். வனத்துறைக்கு புகார் கூறியும் காட்டெருமை பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது, தெரு விளக்குகளும் எரியாததால், இருளில் தினமும் நடந்து செல்லும் மக்களை காட்டெருமைகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.