தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளி கல்வி இடைநிற்றல்; விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

 பள்ளி கல்வி இடைநிற்றல்; விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

 பள்ளி கல்வி இடைநிற்றல்; விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி


ADDED : ஜன 22, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி காந்தி மைதானத்தில் பள்ளி கல்வி இடைநிற்றல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடந்தது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மகாராஷ்டிரா தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து, பள்ளிக்கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடத்தி வருகின்றன.

அதன்படி, நீலகிரி பிரீமியர் லீக், ஐந்து ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள், மாணவர் மற்றும் மாணவியருக்கு தனித்தனியாக, கோத்தகிரி காந்தி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.

16 அரசு பள்ளி மாணவ, மாணவியர் விளையாடினர். ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் வட்டார அளவில் போட்டிகள் நடந்தது.

கோத்தகிரியில் நடந்த போட்டியில், குன்னுாரில் இருந்து, மூன்று அணிகள்; கோத்தகிரியில் இருந்து, நான்கு அணிகள் பங்கேற்று விளையாடின.

அதில், மாணவர்களுக்கான போட்டியில், கோத்தகிரி வட்டார அளவில் கீழ்க்கோத்திகிரி அரசு பள்ளி அணி; குன்னுார் வட்டார அளவில் அறிஞர் அண்ணா அரசு பள்ளி அணியும் வெற்றி பெற்றன. இந்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.

மாணவியருக்கான போட்டியில், கோத்தகிரி வட்டத்தில் சோலுார் மட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி அணி; குன்னுார் வட்டத்தில் துாதுார்மட்டம் பள்ளி அணியும் வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வித்துறை) பிரமோத் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us