UPDATED : ஆக 30, 2026 06:47 PM
ADDED : ஆக 30, 2026 06:42 PM
மஞ்சூர்: மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். என்.சி.சி., அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு நிகழ்வுகள் குறித்து, பெற்றோர்கள் மத்தியில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி, 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உறுதுணையாக இருப்பது, மாணவ, மாணவியரின் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது என, முடிவெடுக்கப்பட்டது.
கடந்த, மூன்று ஆண்டுகளாக பள்ளியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் சீனிவாசன், மோகன், ஆசிரியைகள் ஜெயசித்ரா, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், ஊட்டி அருகே, தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியை பார்வதி தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா, துணைத் தலைவர் சுருதி மற்றும் ஒருங்கிணைப்பாளர் பீமன் உட்பட, பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.
முதுகலை ஆசிரியர் செவனன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் முதுகலை ஆசிரியர் தேவராஜ் நன்றி கூறினார்.
